அவசர அவசரமாக குறைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு!
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை அறுபதாக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நிலை அறிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் பதில் காாவல்துறை மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு படையினர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்பு
இதில் 38 காவல் பிரிவுகளுக்கு மாற்றப்பட்ட இந்தக் குழுவில் 7 தலைமை ஆய்வாளர்கள் மற்றும் நான்கு காவல் ஆய்வாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த குழு ஓய்வுபெற்ற ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு எண். 5 இன் கீழ் நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு இலக்கம் 5 என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பாகும்.
அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த மூன்று பாதுகாப்பு வாகனங்களும் இதற்கு முன்னர் அகற்றப்பட்டன.
ரணிலின் பாதுகாப்பு
மேலும், முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்கிய 116 காவல்துறை உத்தியோகத்தர்கள் சேவைத் தேவைகளை கருத்திற் கொண்டு நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக அறுபத்தேழு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ஏனையவர்கள் பின்வருமாறு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை ஐம்பத்தொன்றாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை ஐம்பத்தெட்டாகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |