மரநடுகை வாரம்: றீ(ச்)ஷாவால் வழங்கி வைக்கப்பட்ட 7000 கறுவா கன்றுகள்(படங்கள்)
IBC Tamil
Sri Lankan Tamils
Kilinochchi
Sri Lanka
Baskaran Kandiah
By Dilakshan
கிளிநொச்சி இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையினால் மரநடுகை வாரம் கடந்த திங்கட்கிழமை (20) ஆரம்பிக்கப்பட்டு வடக்கின் பல பகுதிகளில் கறுவா மர கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனைதொடர்ந்து, கிளிநொச்சி மருதுநகர், பன்னங்கண்டி, அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கும் பாடசாலைகளுக்கும் கறுவா கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த செயற்திட்டமானது “ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம்” என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மரநடுகை வாரம்
இந்தநிலையில், இன்றைய தினமும் தமிழ்த் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனால் றீ(ச்)ஷாவின் மரநடுகை வாரத்தை முன்னிட்டு 7000 கறுவா மர கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்