கனடாவில் வீதிகளில் படுத்துறங்கும் அகதிகள் - தொழிலதிபர் அளித்த உறுதிமொழி
Refugee
Toronto
Canada
By Sumithiran
கனடாவிற்கு சென்ற புலம்பெயர்ந்தவர்கள் விசா கிடைக்காத நிலையில் ரொறன்ரோ நகர வீதிகளில் தமது காலத்தை கழித்து வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வீதிகளில் படுத்துறங்கும் இவர்களுக்கு உதவ தொழிலதிபரான மொஹமட் ஃபகாய் என்பவர் முன்வந்துள்ளார்.
பராமவுன்ட் ஃபைன் ஃபூட்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரான மொஹமட் என்ற தொழிலதிபரே புலம்பெயர்ந்த அகதிகளுக்கு உதவ முன்வந்தவராவார்.
வீட்டிற்கான வாடகை பணம்

இதன்படி வீதிகளில் படுத்துறங்கும் அகதிகள் வீடு ஒன்றை தெரிவு செய்தால் அதற்குரிய வாடகையாக சுமார் 20000 டொலர்களை நன்கொடையாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அகதி நல ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் இந்த அகதிகளுக்கான வீடு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி