நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை நீக்குவது தொடர்பில் அவதானம்!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை நீக்கி புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டு வருவது குறித்து இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தி இந்த யோசனையை முன்வைத்தார்.
இருப்பினும், அதற்கு காலம் எடுக்கும் என்ற ரீதியான கருத்துக்கள் அதிகம் முன்வைக்கப்பட்டிருந்தன.
அதுவரையில் 20ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆம் திருத்தச் சட்டத்தை மீள கொண்டுவரும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Govt agrees to withdraw 20A and bring back clauses of 19A as 21st amendment. Minister DineshG informed party leaders today at the special meeting convened by Speaker. #GoHomeGota #lka #manoganesan pic.twitter.com/FHHpIIVjPC
— Mano Ganesan (@ManoGanesan) April 18, 2022
