மரதன் ஓட்டப் போட்டிகளுக்கான புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
நாட்டில் பாடசாலைகள் மற்றும் பொதுமக்களுக்காக நடத்தப்படும் நீண்ட தூர ஓட்டப் போட்டி மற்றும் மரதன் போட்டிகளுக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மரதன் மற்றும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாகும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அறிக்கை
மரதன் ஓட்டப் போட்டிகளில் ஈடுபடும் விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுவதற்கு மருத்துவ அறிக்கை மற்றும் ஈசிஜி (ECG) அறிக்கையை வைத்தியரிடம் வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக அண்மையில் பதிவான விளையாட்டு வீரர்களின் மரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |