இறுதி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
இறுதிப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையின் உண்மையான ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற புதிய ஆணைக்குழுவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.
மேலும், இது தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு நகரில்
1983 - 2009 க்கு இடையில் இலங்கையில் இடம்பெற்ற வடகிழக்கு மோதல்களின் போது, எவரேனும் ஒருவர் உயிர் சேதம் அல்லது உடமைச் சேதங்களைச் சந்தித்தாலோ அல்லது இலங்கையில் ஏதேனும் ஒரு இடத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தாலோ, விசாரணைகளை மேற்கொள்வது மற்றும் அந்த மக்களுக்கு நீதி வழங்குவதும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பரிந்துரைகளை செய்வதும் இந்த ஆணையத்தின் பொறுப்பாகும்.
சட்டமூலத்தின் மீதான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இந்த ஆணைக்குழு கொழும்பு நகரில் நிறுவப்பட வேண்டும், ஆனால் அதன் கூட்டங்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் நடத்தப்படலாம்.
வர்த்தமானி அறிவித்தல்
அதேவேளை, ஏழு பேருக்கு குறையாமல் ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டிற்கு முன்னர் இந்த ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் எதிர்பார்க்கிறதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |