மித்தெனிய விவகாரம் : பியல் மனம்பேரிக்கு விளக்கமறியல் உத்தரவு
மித்தெனிய - தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பியல் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (07) காலை வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
பியல் மனம்பேரி கைது
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பியல் மனம்பேரி நேற்று (6) கைது செய்யப்பட்டார்.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவினரால் நேற்று முன்தினம் (05) நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மித்தெனிய - தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோ கிராம் இரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுடன் பியல் மனம்பேரிக்கு தொடர்புள்ளது என்ற அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
