புலம்பெயர் தமிழர் தடை நீக்கம்! சிறிலங்கா அரசாங்கத்தின் ஏமாற்று நாடகமே - பகிரங்க குற்றச்சாட்டு
புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியமை தமிழர் அரசியல் நலன் சார்ந்த செயல் அல்ல என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்கும் நிலையில் சிறிலங்கா அரசாங்கம் பேரினவாத அரசியலின் நலன் கருதி செயல்படுவதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மௌனம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மௌனம் காக்கும் சிறிலங்காவின் ஆட்சியாளர்கள், புலம்பெயர் அமைப்புகளின் தடையை மாத்திரம் நீக்குவது ஒரு ஏமாற்று நாடகமென அருட்தந்தை மா. சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது பொருளாதார இருளுக்குள் வீழ்த்தப்பட்ட இலங்கையை மீண்டும் உயிர்ப்பிக்க முன்னெடுக்கப்படும் சர்வதேச இராஜதந்திரம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு
பேரினவாத ஆட்சியாளர்களின் தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டின் யுத்த நீட்சியும் அவர்கள் மேற்கொண்ட பொதுச் சொத்துக்களின் கொள்ளையிடலுமே நாடு இத்தகைய வீழ்ச்சியை எதிர்நோக்கியமைக்கு காரணம் என அருட்தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தில் பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்வதாக தெரிவித்து நாட்டுக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
புலம்பெயர் அமைப்புக்கள் தொடர்பான ரணிலின் நகர்வை பாராட்டிய சம்பந்தன்!
YOU MAY LIKE THIS