780 பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் தடை நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, தடை செய்யப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களில் 780 பொருட்களுக்கான தடை நீக்கப்பட்டு மீண்டும் இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் மீளாய்வு செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானமும் மிகவும் கவனமாக எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் அமைப்பை வினைத்திறன் மிக்கதாக மாற்ற 2 துணைக் குழுக்களை நிறுவ அரச பொது கணக்குகள் தெரிவு குழுவில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் 10 பில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள போதிலும் அது முறையாகச் செயற்படவில்லை என தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்