விஜயகாந்தின் கால் விரல்கள் நீக்கம்
கால் விரல்கள் அகற்றம்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன் வலது காலில் உள்ள மூன்று விரல்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்திற்கு இரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தாலேயே கால் விரல்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேமுதிக வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது.
மருத்துவர்களின் கண்காணிப்பில்
மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.
ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
— Rajinikanth (@rajinikanth) June 21, 2022

