கரும்புள்ளிகள் மற்றும் முகச்சுருக்கத்தை நீக்கி முகத்தை பொலிவாக்கும் பப்பாளி!
எமது முகத்தில் பல்வேறு காரணங்களால் கரும்புள்ளிகள் தோன்றி, எமது முகத்தை பொலிவு இல்லாமல் ஆக்குகிறது.
முகத்தில் தோன்றுகின்ற கரும்புள்ளிகளை நீக்க எமது வீட்டில் இலகுவாகவே கிடைக்கும் பப்பாளி சிறந்த தீர்வாக சொல்லப்படுகின்றது.
பப்பாளி எமது உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதுடன், சருமப் பிரச்னைகளுக்கு தீர்வினையும் வழங்குகிறது.
பப்பாளியின் நன்மைகள்
அந்தவகையில், எமது முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு பப்பாளியில் உள்ள விற்றமின் ஏ மற்றும் பாப்பைன் என்சைம் என்பன உதவுகின்றது.
இதேவேளை, பப்பாளியில் உள்ள அன்டி ஒக்ஸிடன்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகச்சுருக்குகளை இல்லாமலாக்கி முகத்தை பொலிவாக மாற்றுகிறது.
செய்முறை - 1
இதற்கு, பழுத்த அரை கப் பப்பாசி, இரண்டு தேக்கரண்டி பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தென் என்பவற்றை சேர்த்து ஒன்றாக பிசைந்து பசை போல எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், உங்கள் முகம் மற்றும் கழுத்துப்பகுதிகளில் அதனை நன்றாக பூச வேண்டும், 15 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
செய்முறை - 2
பிறகு மீண்டும், ஒரு தேக்கரண்டி தேன், அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் பப்பாளி சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் அவற்றை உங்கள் முகத்தில் பூசி, 30 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்.