யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல நிலையில் காற்றின் தரம் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் (Department of Motor Traffic) வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நாட்டில் நேற்று (02) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் நல்ல நிலையிலும், யாழ்ப்பாணம், குருணாகல், காலி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் மிதமான நிலை நிலையிலும் காணப்பட்டது.
காற்றின் தரக் குறியீடு
இன்று (03) காற்றின் தரம் 26 தொடக்கம் 56க்கு இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் பெரும்பாலான நகரங்களில் நல்ல நிலையிலும், யாழ்ப்பாணம், காலி, புத்தளம் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் மிதமான நிலையிலும் இருக்கும் என்பதை குறிக்கின்றது.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு நல்ல நிலையில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

