ஆஷு மாரசிங்க விவகாரத்தில் நீதிமன்றில் முன் பிணை மனு தாக்கல்
ஆஷு மாரசிங்க தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஆதர்ஷ கரந்தனவின் சட்டத்தரணிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்மை கைது செய்யவுள்ள நிலையில், முன் பிணை மனு விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை இன்று (03) பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன டி அல்விஸ், பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி ஆகியோருக்கு ஜனவரி 10 ஆம் திகதி நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு அறிக்கை அனுப்பியுள்ளார்.
மனுதார் கைது
ஆஷு மாரசிங்க நாயுடன் இயற்கைக்கு மாறான செயலில் ஈடுபடும் காணொளி வெளியானதை அடுத்து, அது போலியான காணொளி என குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ததாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் மனுதாரரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.