உடனடியாக பதவி விலகுங்கள் - பதில் அதிபரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
நாட்டிலிருந்து தப்பிச்சென்ற இழிவான அதிபர்
நாட்டிலிருந்து தப்பிச்சென்ற இழிவான அதிபரால், ரணில் விக்ரமசிங்க பதில் அதிபராக நியமிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில்,
சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி பதில் அதிபரான ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதில் முதலாவதாக கோரப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டாம்
ஜூலை 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறுகின்ற போது, அதிபர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் ரணில் விக்ரமசிங்கவிடம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தை அடக்குமுறைக்கும் வன்முறைகளுக்கும் பயன்படுத்த வேண்டாம் என மூன்றாவது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஆணையற்ற அரசாங்கத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக பதவி விலகுவது குறித்து சிந்திக்குமாறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் அறிக்கை மூலம் பதில் அதிபரிடம்வலியுறுத்தியுள்ளது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்