சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக முதியவர் சடலமாக மீட்பு
Jaffna
Sri Lanka Police Investigation
Selva Sannidhi Murugan Temple
By Vanan
யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று புதன்கிழமை(11) காலை அப்பகுதியில் நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்