உலகில் மிகச்சிறிய 'ஊர்வன வகை உயிரினம்' கண்டுபிடிப்பு
germany
research
By Vasanth
ஊர்வன வகை உயிரினங்களிலேயே மிகவும் சிறியது என நம்பப்படும் உயிரினத்தை ஜெர்மனி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆபிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், பதிமூன்றரை மில்லிமீற்றர் நீள ஆண் பச்சோந்தியையும், 22 மில்லிமீற்றர் நீள பெண் பச்சோந்தியையும் கண்டுபிடித்தனர்.
அரை அங்குலத்திற்கும் குறைவாக, சூரியகாந்தி மலரின் விதை அளவே உள்ள இந்த ஆண் பச்சோந்தி தான் இது வரை கண்டறியப்பட்டுள்ள ஊர்வன வகை உயிரினங்களில் மிகவும் சிறியது என அவர்கள் தெரிவித்தனர்.
ப்ரூகேசியா நாநா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த சிறிய பச்சோந்திகள் சருகுகளில் இருக்கும் சிறிய பூச்சிகளை உண்டு உயிர்வாழ்கின்றன.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்