அதிகாலைவேளை மயக்க மருந்து தெளித்து வர்த்தகரின் வீட்டில் பாரிய கொள்ளை(படங்கள்)
தம்புள்ளை, மிரிஸ்கொனியாவ சந்தி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் இன்று (08) அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் கும்பல் பணம், நகைகள் மற்றும் கார் ஒன்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தம்புள்ளை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பின்புறம் புகுந்த கொள்ளையர்கள், வீட்டின் முன்பக்க ஜன்னலில் இருந்த இரும்புச் சட்டங்களை அப்புறப்படுத்தி, வீட்டுக்குள் புகுந்து, வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் சோதனையிட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நெக்லஸை கழற்றி சென்றுள்ளர்.
வீட்டில் இருந்த பாதுகாப்பு கமரா அமைப்பின் தரவுத்தளத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளதாக வீட்டார் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர்கள் பயணித்த கார் தம்புள்ளை இப்பன்கடுவ பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலை வேளையில் தமது வீட்டின் அறைகளில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுவாசிப்பதில் சிரமம், தலைசுற்றல், தலைவலி போன்ற உணர்வுகள் காணப்படுவதாக அவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயும் மயக்க நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வீடு மிகவும் பாதுகாப்பாக இருந்ததாகவும், சுவருடன் கூடிய கதவுகள் மற்றும் பாதுகாப்பு கமரா அமைப்புகளுடன் கூடிய வீடொன்றே இவ்வாறு கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், இந்த வீடு இதேபாணியில் கொள்ளையிடப்பட்டுள்ளது. அப்போது அந்த வீட்டில் வேறொரு பகுதியினர் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை காவல்நிலைய தலைமையக காவல் பரிசோதகர் ருஷாந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



