கோட்டாபயவை பதவி விலக்க வகுக்கப்பட்டுள்ள வியூகம்
parliament
gotabaya
resign
party leaders
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பல கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் அரச தலைவர் பதவி விலகத் தயார் என சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
எனினும் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை சபாநாயகர் முற்றாக மறுத்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி