புதிய அரசியலமைப்பில் மக்களின் அடிப்படை உரிமையில் முன்னெடுக்கவுள்ள மாற்றம்!
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Nalinda Jayatissa
By Harrish
புதிய அரசியலமைப்பை வகுக்கும்போது, சுகாதார சேவையைப் பெறுவதற்கான உரிமையை மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ( Nalinda Jayatissa) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டுமாயின் அதற்கு அவசியமான ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும்.
சுகாதார சேவை
தற்போது, அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் நிறைவில் மக்கள் தங்களுக்குத் தேவையான இடங்களில் தமக்கான சுகாதார சேவைகளைப் பெற முடியும் என்ற உறுதிப்பாட்டினை அரசாங்கத்தினால் வழங்க முடியும்.”என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி