முட்டை விநியோகம் குறித்து சதொசவின் தீர்மானம்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் வெளியிட சதொச தீர்மானித்துள்ளது.
உள்ளூர் முட்டையின் விலையேற்றம் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சதொச கிளைகளுக்கு முன்பாக வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று அவற்றை வாங்குகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
30 முட்டைகள் கொள்வனவு
சதொச நிறுவனம் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை வெளியிடுவதுடன், அவற்றை நிர்வகித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முட்டைகளை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வாடிக்கையாளருக்கு 35 ரூபா என்ற விலையில் ஒரு முட்டைக்காக 30 முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த சில நாட்களில் அந்த தொகை மட்டுப்படுத்தப்படும் எனவும் சதொச தெரிவித்துள்ளது.
60 ரூபாய்க்கு விற்பனை
இதற்கிடையில், முட்டை கடை உரிமையாளர்கள் உள்ளூர் சிவப்பு முட்டை 60 ரூபாய்க்கும், வெள்ளை முட்டை 58 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றதாக நுகர்வோர் தெரிவித்தனர்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 15 மில்லியன் முட்டைகள், தர நிர்ணயத்திற்காக அனுப்பப்பட்டு தற்போது சந்தைக்கு விடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |