கொஞ்சமும் தயங்காமல் ஈரான் விடுத்த மிரட்டல்! அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி
ஈரான் அதன் பாதுகாப்பிற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் பதிலளிக்கும் என எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் தொடர்பில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ட்ரம்பின் எச்சரிக்கை
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தம் அல்லது பேச்சுவார்த்தைகளுக்கான நேரம் குறைந்து கொண்டு செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Image Credit: KSAT
இந்த நிலையில், அமெரிக்க கடற்படையின் ஒரு பெரிய போர்க்கப்பல் மிகுந்த உற்சாகத்துடனும் உறுதியுடனும் ஈரானை நோக்கி வேகமாக வருவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் அச்சுறுத்தும் பதில்
இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, "பரஸ்பர மரியாதை மற்றும் நலன்களின் அடிப்படையில் ஒரு உரையாடலுக்குத் தயாராக உள்ளது" என்று ஈரான் கூறியுள்ளது.

Image Credit: Bloomberg.com
எனினும், அதன் பாதுகாப்பிற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் என்று ஈரான் அச்சுறுத்தும் பதிலையும் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்று வலியுறுத்தி வருவதுடன், அணு ஆயுதங்களை பரப்ப முயற்சிப்பதாக அமெரிக்கா மற்றும் அதன் பிரதிநிதிகளின் குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |