மீண்டும் ஆரம்பிக்கப்படும் தொடருந்து சேவை
Sri Lanka
Sri Lankan Peoples
Train Crowd
By Kiruththikan
தொடரூந்து சேவை
இன்று காலை 5 மணியுடன் மீண்டும் தொடருந்து சேவைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரூந்து பொது முகாமையாளர் (GMR) தம்மிக்க ஜயசுந்தர குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேற்று நிலவிய பதற்ற நிலையை தொடர்ந்து மேல்மாகாணத்திற்க்கான தொடருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று மாலை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் இன்று காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கட்டது.
இன்று காலை 5 மணியுடன் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து வழமைபோல் தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்டுகின்றது.
