புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்து விட்டார் - உறுதிப்படுத்திய காவல்துறை
Sri Lanka
Easter Attack Sri Lanka
By pavan
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் (ஸாரா ஜஸ்மின்) உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களில் சாரா ஜெஷ்மின் என்ற புலஸ்தினி மஹேந்திரன் உள்ளடங்குவதாக மரபணு சோதனையில் உறுதியாகியுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு தப்பிச்சென்றார்
முன்னதாக புலஸ்தினி மஹேந்திரன் இந்தியாவுக்கு தப்பிச்சென்றார் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே காவல்துறை ஊடகப்பிரிவின் இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி