வீட்டின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியை
கிணறு ஒன்றிலிருந்து ஓய்வுபெற்ற ஓர் ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது நேற்று (23.12.2025) மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறை பிரிவுக்குட்பட்ட திசைவீரசிங்கம் சதுக்கம் - ஆறாம் குறுக்குத் தெருவிலுள்ள வீடொன்றில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமையில் வசித்து வந்த வினோதா ஜெகநாதன் (வயது 71) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
வீட்டில் இருந்த பணிப்பெண் வெளியே சென்று திரும்பிய போது, இவரைக் காணாததால் தேடியுள்ளார்.

இதன்போது அவர் கிணற்றில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அயலவர்களுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடயவியல் பிரிவு காவல்துறையினரும், மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மேலதிக விசாரணை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லுமாறு பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |