நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு : காரணத்தை வெளியிட்ட நீதி அமைச்சர்

Sri Lanka Law and Order Harshana Nanayakkara
By Sathangani Jul 29, 2026 04:13 AM GMT
Report

நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும் அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் இந்த வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வளர்வடைந்த நாடுகளில் 10 .லட்சம் மக்களுக்கு 47 முதல் 60 நீதிபதிகள் உள்ள நிலையில், இலங்கையில் 10 இலட்சம் பேருக்கு 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு அரசின் மகிழ்ச்சி செய்தி

அரச பகுப்பாய்வாளர் திணைக்களம்

1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச ரீதியில் பல நாடுகளில் ஓய்வுபெறும் வயது 70 ஆக உள்ளது. நீதிபதிகளின் அனுபவம் அதிகரிக்கும் போது சட்டக் கட்டமைப்பு மேலும் வளர்ச்சியடையும்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு : காரணத்தை வெளியிட்ட நீதி அமைச்சர் | Retirement Age Of Judges Extended Justice Minister

நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு, பணியாளர்கள் நியமனம் மற்றும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் போன்ற தொடர்புடைய துறைகளின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதன் மூலம் மட்டுமே மக்களுக்கு விரைவான நீதி கிடைக்கும்.

இந்த வயது அதிகரிப்பு மேன்முறையீட்டு அல்லது உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு மட்டும் உரியது அல்ல; மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்கள் வரை அனைத்து நிலைகளிலும் உள்ள நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கும் பொதுவானது.

கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம் - புனித தன்மையை கெடுக்கும் செயலா?

கழிவுகளால் நிரம்பும் வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை பிரதேசம் - புனித தன்மையை கெடுக்கும் செயலா?

சர்வஜன வாக்கெடுப்பு

அத்துடன், இந்த வயதெல்லை நீடிப்பு நடவடிக்கைகளால் நீதித்துறை சுதந்திரத்துக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது. குறிப்பிட்ட ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு இந்தத் திருத்தம் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படவில்லை, இது ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பையும் சீரமைப்பதற்கான நடவடிக்கை.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு : காரணத்தை வெளியிட்ட நீதி அமைச்சர் | Retirement Age Of Judges Extended Justice Minister

அரசியலமைப்பின்படி நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கோ அல்லது அவர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கோ சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை. 2020 ஆம் ஆண்டிலும் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட போது மக்களின் விருப்பம் கேட்கப்படவில்லை” என  தெரிவித்தார்.

ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு! பேசப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்

ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு! பேசப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்

 



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026