மதுவரி திணைக்களம் வருமானம் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Money
Excise Department of Sri Lanka
By Shalini Balachandran
இலங்கை (Sri Lanka) மதுவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் எம்.ஜே.குணசிறி (M.J Gunasiri) குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இதனூடாக நாட்டிற்கு பல பில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுவரி திணைக்களம்
இதனடிப்டையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 105 பில்லியன் ரூபாய் வருமானத்தை இலங்கை மதுவரி திணைக்களம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும் என எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்