அதிகரிக்கப்பட்ட வெகுமதி பணம்: மக்களுக்கு காவல்துறையின் அறிவிப்பு
சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் குறித்து துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி பணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா காவல்துறை ஊடக அறிக்கையொன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பதிவான குற்றங்களின் அடிப்படையில், நாட்டில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடுகள்
அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் துப்பறியும் நபர்களை ஊக்குவிக்கும் நோக்கில், காவல்துறை அது தொடர்பான வெகுமதி நிதியை அதிகரிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தகவல் தெரிவிப்பவர்களுக்கு தற்போது T-56 துப்பாக்கிக்கு ரூ. 01 மில்லியன், கைத்துப்பாக்கிக்கு ரூ. 400,000 மற்றும் ரிவால்வருக்கு ரூ. 300,000 பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் மொத்தமாக சுமார் 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்