கோதுமை மாவின் விலை அதிகரித்தது
Colombo
Sri Lanka
By Sumithiran
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் 160 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை இன்று 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டது.
கோதுமை மாவின் மொத்த விலை
40 ரூபா வரியின் கீழ் கோதுமை மாவை இறக்குமதி செய்யக் கூடியவர்கள் இரத்துச் செய்து உரிமம் பெற வேண்டும் என நிதியமைச்சு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலை அதிகரித்துள்ளது.
