மீண்டும் அதிகரிக்கிறது அரிசி விலை
Sri Lanka
Sri Lankan Peoples
Minister of Energy and Power
Fried rice
By Sumithiran
அதிகரிக்கும் அரிசி விலை
செப்டெம்பர் மாதம் தொடக்கம் ஒரு கிலோ அரிசியின் விலை 290 ரூபாவாக அதிகரிக்கப்படுமென பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இளவேனிற் காலத்தில் ஒரு கிலோ நெல் 140-150 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு
அதுமட்டுமன்றி, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் அரிசியின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

