மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: விரைவில் இலவச அரிசி
Sinhala and Tamil New Year
Ranjith Siyambalapitiya
Sri Lanka
By Laksi
நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 கிலோகிராம் அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு தலா பத்து கிலோகிராம் என இரண்டு தடவைகள் வழங்கப்படவுள்ளது.
அரசாங்கம் தீர்மானம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 10 கிலோகிராம் அரிசியும், எஞ்சிய 10 கிலோகிராம் அரிசி மே முதல் வாரத்திற்குள் வழங்கப்படும்.
மேலும் இந்த நிவாரணத்திட்டத்தின் மூலம் நெல் விவசாயிகள் மற்றும் சிறு நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் பயனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 13 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்