இங்கிலாந்து மன்னரை ஓரம்கட்டிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மனைவி
இங்கிலாந்து மன்னரை விடவும் அதிக சொத்து மதிப்பு பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak)மற்றும் மனைவியிடம் உள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதன்படி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்மற்றும் அவரது மனைவி அக் ஷதாமூர்த்தி(Akshata Murty)யின் சொத்து மதிப்பு ரூ.6,800 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டுக்கான இந்தியவம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் பட்டியலை சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
சொத்து மதிப்பில் முன்னேறிய ரிஷி சுனக் தம்பதிகள்
இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பணக்காரர் பட்டியலில் 44 வயதான ரிஷி சுனக் மற்றும் அக் ஷதா மூர்த்தி தம்பதி கடந்த ஆண்டு 275-வது இடத்திலிருந்து 245-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அவர்களது சொத்து மதிப்பு 651 மில்லியன் பவுண்டாக (ரூ.6,800 கோடி) உள்ளது. இது மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பான 610 மில்லியன் பவுண்டை (ரூ.6,435 கோடி/258-வது இடம்) விட அதிகம்.
கணவரை விடவும் மனைவியின் வருமானம் அதிகம்
அக் ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவர் ரிஷி சுனக்கின் வருமானத்தை விட மிக அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதிநிலை அறிக்கையில் 2.2 மில்லியன் பவுண்டை மட்டுமே ரிஷி சுனக் வருமானமாக ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் பங்கை வைத்திருப்பதுதான் அக் ஷதா மூர்த்தியிடம் உள்ள மதிப்பு மிக்க சொத்தாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதன் மூலம் அவர் 13 மில்லியன் பவுண்டை (ரூ.137 கோடி) டிவிடெண்டாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |