வெள்ளப்பெருக்கில் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் முடிவை மாற்றிய நேபாள அரசு
சர்வதேச நிதி உதவிகளை தவிர வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்திருந்த நேபாள அரசு தற்போது அனர்த்ததினால் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் முடிவை மாற்றி உள்ளது.
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை (26.08.2026) ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 கடந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் பகுதியில் இமயமலைத் தொடரில் பனிப்பாறை ஒன்று சரிந்து நதியின் பாதையை அடைத்ததன் பின்னர், நீர்த்தேக்கம் உடைந்து பெருமளவான நீர் வேகமாக கீழ்நோக்கி பாய்ந்து நேபாளத்துக்குள் நுழைந்தமையே இந்த வெள்ளப்பெருக்குக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவை மாற்றிய நேபாள அரசு
ரசுவா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பெருமளவான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆரம்பத்தில் சர்வதேச மீட்புக் குழுக்களின் உதவியை நிராகரித்த நேபாள அரசு, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளது.
இதன்படி, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நிபுணர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேபாளத்திற்கு உதவும் வகையில் இந்தியா ஏற்கனவே பெருமளவான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.
மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையான NDRF-இன் பயிற்சி பெற்ற குழுக்களையும் தேவையான உபகரணங்களுடன் நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |