கட்டுப்பாடு இன்றி உயர்வடையும் விலைவாசி! திணறும் நாட்டு மக்கள்
Price
People
Economy
SriLanka
Dollar
Nihal Seneviratne
By Chanakyan
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 30 முதல் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
பல்வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு உயர்வடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன (Nihal Seneviratne) தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் டொலர் பிரச்சினை காரணமாக இவ்வாறு விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதுடன், இன்றைய தினம் முதல் பஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி