மருந்து குடித்த பின் சிக்ஸர் அடித்த பாகிஸ்தான் வீரன்! வைரலாகும் காணொளி
பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான், தனக்கு வலி ஏற்பட்டபோது மருந்து குடித்துவிட்டு சிக்ஸர் விளாசிய காணொளி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
கராச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் 77 ஓட்டங்கள் விளாசிய பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
திடீர் வலி
இந்த நிலையில் அவர் 62 ஓட்டங்களில் இருந்தபோது ஒரு ரன் எடுக்க ஓடினார். அப்போது அவருக்கு திடீர் வலி ஏற்பட்டது.
இதனால் ரிஸ்வான் மைதானத்தில் அமர்ந்துவிட்டார். உடனே ஓடி வந்த உதவியாளர்கள் அவருக்கு வலி நிவாரணி மருந்தை அளித்தனர். அதனை அருந்திய ரிஸ்வான் துடுப்பாட்டத்தை தொடர்ந்தார்.
Cramps? What cramps? Rizwan got his tonic and showcased his superpower ?♂️#PAKvNZ | #TayyariKiwiHai pic.twitter.com/AcEMtquKNj
— Pakistan Cricket (@TheRealPCB) January 9, 2023
மருந்தை குடித்த அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரட்டினார்.
இது தொடர்பான டுவிட்டரில் பகிர்ந்துள்ள பாகிஸ்தான் அணி நிர்வாகம், ரிஸ்வான் மருந்தை குடித்ததும் அதீத சக்தியை பெற்றுவிட்டார் என குறிப்பிட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
