தமிழர் பகுதியில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: மூவர் காயம்
Vavuniya
Sri Lanka Police Investigation
Accident
By Sathangani
வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (15) வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் எதிர் திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்