தொடர்ந்தும் போர்த்துக்கல் தேசிய அணியில் ரொனால்டோ! புதிய பயிற்சியாளரின் திட்டம்
போர்த்துக்கல் அணியின் புதிய தேசிய அணிப் பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது போசுபொருளாகியுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுவதை தொடர்ந்தால் , அவரைத் தொடர்ந்து பயன்படுத்துவேன் என்றும், அந்த முன்கள வீரரால் ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது கடைசி உலகக் கோப்பையில் பங்கேற்றுவிட்டதாகக் ரொனால்டோ கூறிய றிலையில், 2026 உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போர்த்துக்கலின் தோல்வியின் பின்னர் இது குறித்த கேள்விகள் வெளிவந்துள்ளன.
போர்த்துகீசிய கால்பந்தின் சின்னம்
எனினும், தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதா இல்லையா என்பது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

அவர் விளையாடும் வரையிலும், தேர்வு செய்யப்படும் நிலையில் இருக்கும் வரையிலும், சில வரம்புகளுக்கு உட்பட்டும், தேசிய அணிக்குச் சிறந்ததாக நான் கருதும் நிபந்தனைகளின் கீழும் அவரைத் தேர்ந்தெடுப்பேன்,"என்று ஜீசஸ் தனது அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தான் ரொனால்டோவிடம் இன்னும் பேசவில்லை என்றும், ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளின் முன்னாள் நட்சத்திர வீரரான அவரது கால்பந்து எதிர்காலம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
ரொனால்டோ போர்த்துகீசிய கால்பந்தின் சின்னம். ரொனால்டோ தேசிய அணியின் சின்னம். அந்த விடயம் என்றென்றும் சரித்திர ஏடுகளில் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |