சவூதியில் ரொனால்டோவுக்கு தங்க உந்துருளி - வைரலாகும் காணொளி..!
உலகின் முன்னணி கால்பந்தாட்ட நட்சத்திரங்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி அரேபியாவின் அல்நாசர் கழக அணிக்காக விளையாடி வருகிறார்.
போர்த்துக்கல் நாட்டின் தேசிய கால்பந்தாட்ட வீரரான இவர் தற்போது கழகமட்ட போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் சவூதி அரேபியாவால் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 22 கரட் தங்கத்தால் ஆன உந்துருளி தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
தங்க முலாம் பூசப்பட்டுள்ளது
ஆனால் இந்த உந்துருளி சவூதி அரேபியாவை சேர்ந்த பைசல் அபு சாரா என்பவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘The Storm’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உந்துருளி முற்றிலும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது என்றும் உலோகத் தங்கத்தால் உருவாக்கப்படவில்லை என்றும் பைசல் அபு சாரா தெரிவித்துள்ளார்.
#viralvdoz
— ViralVdoz (@viralvdoz) May 21, 2023
The Gold Plated motorcycle belongs to a person named Faisal Abu Sara, who is from #SaudiArabia. According to him, this motorcycle, which is named ‘The Storm’, There are no news reports to prove this was gifted to #CristianoRonaldo the claim made in the post is False pic.twitter.com/psMhujv8ep
இந்த உந்துருளி கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பரிசளிக்கப்பட்டது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
