மெஸ்ஸி, எம்பபேயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த ரொனால்டோ..!
உலக கால்பந்து ஜாம்பவான்களான ஊதிய தொகை அடிப்படையில் மெஸ்ஸி, எம்பபே மற்றும் நெய்மர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் ரொனால்டோ.
போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியா கழகமான அல்-நஸ்ருடன் மிக பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ரொனால்டோவின் புதிய ஒப்பந்தம், PSG நட்சத்திரங்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கைலியன் எம்பாப்பே ஆகியோரை சம்பளத்தின் அடிப்படையில் முந்தி அவரை முதல் கால்பந்து வீரராக மாற்றியுள்ளது.
200 மில்லியன் பவுண்ஸ்
குறித்த ஒப்பந்தத்தில் 2.5 வருடங்களுக்கு 200 மில்லியன் பவுண்ஸ் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மெஸ்ஸி வருடாந்தம் 35 மில்லியன் பவுண்ஸ் தொகையை ஊதியமாக பெறுகிறார்.
மான்செஸ்டர் அணியுடனான மோதல், 2022 உலகக்கோப்பையில் அவமதிப்பு என ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்த தருணத்தில்தான், சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் அணியில் இணைந்திருக்கிறார்.
65 ஆண்டுகள் பழமையான சவூதி அரேபிய லீக் அணிக்காக விளையாட ரொனால்டோ செய்யப்பட்டுள்ளார்.
ரொனால்டோ கருத்து
இதுகுறித்து பேசிய ரொனால்டோ, "ஐரோப்பிய கால்பந்தில் நினைத்த அனைத்தையும் வென்றேன். ஆசியாவில் என் அனுபவத்தை பகிர இதுவே சரியான தருணம்.
புதிய அணி வீரர்களுடன் விளையாடும் நாளை எதிர்பார்க்கிறேன். அவர்களின் வெற்றிக்கு துணையாக இருப்பேன்." என்று கூறி உள்ளார்.
அல் நஸ்ர் அணி
அல் நஸ்ர் அணி சவூதி அரேபியா புரோ லீக் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை 9 பிரீமியல் லீக் தொடர்கள், 6 கிங் கோப்பைகள், 3 கிரவுன் பிரின்ஸ் கோப்பைகள், 3 கூட்டமைப்பு தொடர்கள், 2 சவூதி சூப்பர் கோப்பைகள் தொடர்களில் கோப்பைகளை வென்றுள்ள.
இந்த அணி கடைசியாக 2019 ஆம் ஆண்டு சவூதி புரோ லீகில் வெற்றிபெற்றது. சர்வதேச கோப்பைகள் அதேபோல் சர்வதேச அளவிலான தொடர்களை எடுத்துக்கொண்டால் ஜிசிசி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2 முறையை கோப்பை வென்றுள்ளது.
அதேபோல் ஆசியாவின் மிக உயரிய கால்பந்து தொடரான AFC கால்பந்து தொடரிலும் 1998 ஆம் ஆண்டு வெற்றிபெற்றிருக்கிறது.
உலக மக்கள் மத்தியில் புகழ்
ரொனால்டோ வருகையால் மீண்டும் இந்த தொடரில் வெல்ல முடியும் என அந்த அணி நம்புகிறது.
அல் நஸ்ர் அணி இவ்வளவு தொகை கொடுத்து ரொனால்டோவை வாங்க மற்றொரு காரணம் அவரது வருகையால் அணிக்கு கிடைக்கும் விளம்பரமும், அதற்கான கட்டணமும் பன்மடங்கு பெரும் என்பதால்தான்.
அதுமட்டுமின்றி பெரும்பாலானோருக்கு தெரியாத அணியாக இருந்த அல் நஸ்ர் இன்று ஒரே நாளில் சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாக மாறி உலக மக்கள் மத்தியில் புகழ்பெற்று உள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
