கொழும்பில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Thulsi
பயண முகவர் நிலையத்திற்கு வந்த 4 பேர் அங்கிருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (01) பிற்பகல் கொழும்பு தலவத்துகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 6 கோடி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முகவர் நிலையத்திற்கு கொள்ளையர்கள் நேற்று (01) பிற்பகல் மோட்டார் வாகனத்தில் வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக தலங்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி