அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்தது ஈரான்! அழிக்கப்பட்டுள்ள முக்கிய ஆயுதங்கள்
ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானக் கொட்டகைகளைக் குறிவைத்து, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்து.
ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில், இத்தாக்குதலில் பல ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், அமெரிக்க விமான மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இத்தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது ஜோர்டானோ உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி
ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரில் நடந்த திருமணக் கொண்டாட்டத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.

அந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து இத்தாக்குதலை நடத்தியதாக IRGC சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய மோதலின் போது ஈரான் இந்த இராணுவத் தளத்தை பலமுறை குறிவைத்துத் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |