அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு
அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 (H-4) விசாவின் கீழ் வழங்கப்படும் வேலை செய்யும் உரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கிப் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இவர்களைச் சார்ந்து வாழும் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு எச்-4 விசா வழங்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் எச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி இருக்கவில்லை. 2015-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலமே, நிரந்தரக் குடியுரிமைக்கு (Green Card) விண்ணப்பித்துக் காத்திருக்கும் எச்-1பி பணியாளர்களின் துணைவர்கள் வேலை அனுமதிப் பத்திரம் (EAD) பெற்றுப் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டது.
சட்ட நடைமுறைகள்
இச்சலுகையைப் பயன்படுத்தி வேலை செய்பவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர்; குறிப்பாக எச்-1பி பணியாளர்களின் மனைவிகளே அதிகளவில் இதன்மூலம் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது இந்த வேலை அனுமதியைத் திரும்பப் பெறுவதற்கான முதற்கட்ட சட்ட நடைமுறைகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளதுடன், இது தொடர்பான பரிந்துரையையும் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ட்ரம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2017-ஆம் ஆண்டு இவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டு, பின்னர் 2021-ல் கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |