வடக்கு - கிழக்கில் 2 இலட்சம் ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு

Eastern Province Northern Province of Sri Lanka Dammika Patabendi
By Theepan Oct 18, 2026 06:36 AM GMT
Report

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார். 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 2012ஆம் ஆண்டு புவியிடங்காட்டித் தொழில்நுட்பத்தைப் (ஜி.பி.எஸ்.) பயன்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான காணிகள் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குற்றத்தடுப்புப் பிரிவு அதிரடி : யாழில் 2 கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் பறிமுதல்

குற்றத்தடுப்புப் பிரிவு அதிரடி : யாழில் 2 கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் பறிமுதல்

அமைச்சரவையின் அனுமதி

அவற்றில் மருத்துவமனைகள், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் தனியார் காணிகளும் உள்ளடங்கியுள்ளன.

வடக்கு - கிழக்கில் 2 இலட்சம் ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு | 2 Lakh Ac Land In The North East Will Be Released

இக்காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதற்காக 2025ஆம் ஆண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டது, அந்தக் குழுவுக்கு ஆறு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டபோதும், ஓராண்டு கடந்தும் இறுதி அறிக்கை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.

சில அதிகாரிகளிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் செயன்முறையை முழுமைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், ஆய்வுகள் நிறைவடைந்து விடுவிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட காணிகளைக்கூட இதுவரை விடுவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இந்தியாவில் துர்கா பூஜை கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி!

இந்தியாவில் துர்கா பூஜை கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி!

மேய்ச்சல் நிலங்களை விடுவித்தல் 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகளை விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து, அதன் ஒப்புதலுடன் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

வடக்கு - கிழக்கில் 2 இலட்சம் ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு | 2 Lakh Ac Land In The North East Will Be Released

வடக்கு மாகாணத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களையும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளை அடையாளம் காண வேண்டும்.

மக்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், திணைக்களங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர்கள், வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களங்களின் உதவிப் பணிப்பாளர்கள், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு:லி்ட்ரோ நிறுவனம்

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு:லி்ட்ரோ நிறுவனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024