ஷிரந்தி ராஜபக்ச நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்
Shiranthi Rajapaksa
Colombo National Hospital
Rajapaksa Family
By Sindu
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு நவலோக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய அவரது உடல்நிலையை கவனத்தில்கொண்டு இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச, நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்காலிக சிகிச்சை
இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தேசிய வைத்தியசாலையில் தற்காலிகமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காகவே அவர் இவ்வாறு தனியார் வைத்தியசாலையான நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி