விரைவில் முடிவுக்கு வரும் அமெரிக்க - ஈரான் போர்: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
ஈரான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் போர்ச் சூழல் மிக விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்தவுடன் உலகளவில் எரிபொருள் (Gasoline) விலைகள் போருக்கு முந்தைய நிலையை விடக் கணிசமாகக் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு கென்டக்கி (Kentucky) மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள்
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட குறுகிய காலத் தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஈரானின் அணுசக்தித் திறன்கள் மற்றும் வசதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகத் ட்ரம்ப் உரிமை கோரியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி வசதிகள் மீண்டும் ஒருபோதும் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதை அமெரிக்கா தற்போது தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஈரான் மீதான போர் முடிவுக்கு வந்ததும், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் பெரும் வீழ்ச்சியடைந்து மக்களின் சுமை குறையும் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஈரானுடனான நீண்டகாலப் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை நெருக்கடியால் அமெரிக்காவில் உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவை குறித்துப் பொதுமக்கள் மத்தியில் நிலவும் கவலைகளைத் தணிக்கும் நோக்கில் ட்ரம்ப் இப் பிரச்சார உரையை ஆற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |