யாழ் மக்களே அவதானம்..! போதனா வைத்தியசாலை முன் நூதனமுறையில் கொள்ளை

Sri Lanka Police Jaffna Jaffna Teaching Hospital Crime Sonnalum Kuttram
By Independent Writer Jun 01, 2025 05:21 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Jaffna teaching hospital ) முன்பாகவுள்ள துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தச் சென்ற குடும்பஸ்தரின் பணப்பையை பறித்துச் சென்று மோசடி செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பளை மாசார் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வேலைக்காக சென்றவேளை நேற்று மாலை தனது துச்சக்கர வண்டியை குறித்த பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்துவதற்காக சென்றுள்ளார்.

துவிச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு செல்ல முற்பட்ட போது எதிரே வந்த ஒருவர் 'உன்னை எனக்கு தெரியும்' என்று கூறி அடாவடித்தனமாக குடும்பஸ்தரின் தொலைபேசி இலக்கத்தைத் தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் குறித்த குடும்பஸ்தருக்கு எதிரே நிற்பவர் யார் என்று தெரியாததால் தான் தொலைபேசி பாவிப்பதில்லை எனது தொலைபேசி இலக்கத்தை தர முடியாது என கூறியுள்ளார்.

உடனே எதிரே நின்றவர் குடும்பஸ்தரின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அவரது பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

பணப்பையை இழந்தவர் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் கடமையிலிருந்தவரிடம் நடந்த சம்பவத்தை கூறி தனது பணப்பையை ஒருவர் பறித்துச் சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு துவிசக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் இருந்தவர் பணப்பையை பறித்துச் சென்றவர் என்னுடைய தம்பி என்றும் நாளைய தினம் நான் அந்த பணப்பையை அவரிடமிருந்து பெற்றுத் தருகிறேன் நீங்கள் இப்போது வீட்டுக்கு செல்லுங்கள் என்று கூறி 500 ரூபாய் பணத்தினை கொடுத்து அவரை அனுப்பியுள்ளார்.

இரவு நேரமாகையால் வேறு வழி தெரியாத குடும்பஸ்தர் பேருந்துக்காக அவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு வீடு சென்றுள்ளார்.

மறுநாள் காலை பணத்தை இழந்த குடும்பஸ்தர் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்திற்குச் சென்று தனது பணப்பையையிலிருந்த வங்கி ஏ.ரி.எம் அட்டை, அடையாள அட்டை அடங்கிய பணப்பையை தருமாறு கேட்ட போது தம்பியிடம் வாங்கியதாக துவிச்சக்கர வண்டி நிலையத்திலுள்ளவர் குடும்பஸ்தரிடம் கொடுத்துள்ளார்.

பணப்பையை வாங்கிப் பார்த்த குடும்பஸ்தருக்கு அதிர்ச்சி காத்திருந்தது குறித்த குடும்பத்தார் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னால் இயன்ற வேலைகளை செய்து தனது தேவைக்காக சேர்த்து வைத்திருந்த எண்ணாயிரம் ரூபாய் பணம் சூறையாடப்பட்டுள்ளதோடு அவரது ஏ.ரி.எம் வங்கிக் கணக்கிலிருந்த 26 ஆயிரம் ரூபாய் பணம் என்பன களவாடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பணப் பையை மீள வழங்கிய துவிச்சக்கர வண்டி நிலையத்திலுள்ளவரிடம் குடும்பஸ்தர் கேட்டபோது ஆயிரம் ரூபாய் பணத்தை பணப்பையினுள் வைத்து கொடுத்து, எனது தம்பியை பிடிக்க முடியாது நீ இதை கொண்டு போ என்று கூறியுள்ளார்.

தனது பணம் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் காவல்துறை நிலையத்திற்கு சென்று முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டை பதிவு செய்ய காவல்துறையினர் குறித்த துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் பணத்தை பறித்தவர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் அவரை உடனே கைது செய்யுமாறும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அண்ணன் என்று கூறிய துவிச்சக்கர வண்டி நிலையத்தில் கடமையில் இருந்தவரையும் விசாரணை செய்யுமாறும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய துவிச் சக்கரவண்டி பாதுகாப்பு நிலையத்தில் கடமையிலிருந்தவரும் பணத்தைப் பாறித்துச் சென்றவரும் திட்டமிட்டு இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக தெரிய வருகிறது.

குறித்த துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் அண்மையில் பணப்பையை பறித்து சென்ற நபரால் நபரால் ஒருவரின் கையடக்க தொலைபேசியும் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலையத்தில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம் பெறுவதால் பொதுமக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க

யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க

யாழில் இளைஞன் அதிரடி கைது

யாழில் இளைஞன் அதிரடி கைது

ஆசிரியர் இடமாற்ற முறைகேடுகள் - ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகை: எச்சரிக்கும் சங்கம்

ஆசிரியர் இடமாற்ற முறைகேடுகள் - ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகை: எச்சரிக்கும் சங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, London, United Kingdom

18 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, கொக்குவில் மேற்கு, Scarborough, Canada

22 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Basel, Switzerland

19 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி