மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் - பௌத்த பீடாதிபதிகள் விடுத்துள்ள அறிவிப்பு
மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள்
மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் பதவிகளில் இருந்து வெளியேற வேண்டுமென அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துரதிஸ்டவசமான நிலைமையிலிருந்து நாட்டு மக்களை மீட்குமாறு அரச தலைவருக்கும், அரசாங்கத்திற்கும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்த போதிலும் அதனை அவர்கள் கவனத்தில்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடாளுமன்றில் ஒன்றிணையுங்கள்
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட சிலர், இன்று அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்தனர். இதன் போதே மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்தனர்.
மக்களின் நலனுக்காக நாடாளுமன்றில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தற்போது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றறும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிற்கெதிராக மக்கள் தன்னெழுச்சியாக பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
