உக்ரைன் மீது திடீர் தாக்குதல் நடத்திய ரஷ்யா!
Ukraine
World
Russia
By Shalini Balachandran
உக்ரைனின்(Ukraine) கார்கிவ் நகரில் ரஷ்யா(Russia) மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
குறித்த தாக்குதலானது இன்று(04) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கார்கிவ் நகர் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நகரத்தின் ஆளுநர் ஒலே சினேஹுபோவ் தெரிவித்துள்ளார்.
விமானத் தாக்குதல்கள்
இந்நிலையில் மீட்பு பணியாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களுக்கு வருகைத்தந்த பின்னரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கார்கிவ் நகரில் இன்று அதிகாலை நான்கு தடவைகள் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் குறித்த பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி