கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் - ரஷ்யாவுக்கு எச்சரிக்கை
ரஷ்யா, உக்ரைன் மீது படை நடவடிக்கையினை மேற்கொண்டால், கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹரிஸ்(Kamala Harris) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜேர்மனியின் மூனிச் நகரில் இடம்பெற்றுவரும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
உக்ரைன் மீது ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்டிருந்த நிலையில், ரஷ்யா படையேடுப்பிற்கான வழிகளைத் தேடுவதாக உலகத் தலைவர்கள் குற்றம் சுமத்திவருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு கருத்து வெளியிட்ட கமலா ஹரிஸ் , ரஷ்யா ஐரோப்பியக் கண்டத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொருளாதார தயார்படுத்தல்களுடன், அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அமெரிக்கா துணை அதிபர், கடுமையான நிதி, ஏற்றுமதி, மற்றும் ரஷ்ய நிதி நிறுவனங்கள் என்பன கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சர்வதேச பாதுகாப்புக் கொள்கை மாநாட்டில், உலகத் தலைவர்கள் பங்கேற்றுவரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமைர் சிலின்ஸ்கியும் ( Volodymyr Zelenskyy) கலந்துகொண்டுள்ளார்.
