அமெரிக்காவுக்கு எதிராக ஆயுதங்களை கொட்டும் ரஷ்யா - சீனா
மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்களுக்கிடையில், அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஈரானுக்கு சில சர்வதேச சக்திகள் நேரடி மற்றும் மறைமுக ஆதரவை வழங்கி வருவதாக உலக நாடுகள் கவலையுடன் கவனித்து வருகின்றன.
ரஷ்யா, சீனா, வட கொரியா போன்ற நாடுகள் ஈரானுடன் நெருக்கமான அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.
குறிப்பாக ஏவுகணை தொழில்நுட்பம், ட்ரோன் தயாரிப்பு, இரட்டை பயன்பாட்டு (dual-use) உபகரணங்கள் போன்ற துறைகளில் இந்த ஒத்துழைப்பு இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
நேரடி ஆயுத விற்பனை குறைவாக இருந்தாலும், தொழில்நுட்ப பகிர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம் ஈரானின் ராணுவ திறன் வலுப்பெறுவதாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், ஈரான் தன்னுடன் தொடர்புடைய ஆயுத அமைப்புகள் மூலம் அமெரிக்க ஆதரவு பெற்ற நாடுகளுக்கு எதிராக மறைமுகமாக செயல்பட்டு வருகிறது.
லெபனானில் ஹெஸ்பொல்லா, யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள், பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள ஆயுத குழுக்கள் ஆகியவற்றுக்கு ஈரான் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான்மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் இதை “அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான சக்தி சமநிலை” என்ற கோணத்தில் அணுகி வருகின்றமை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |