ரஷ்யாவுக்கு விழுந்த பேரிடி - வசமாக சிக்கிய உக்ரைனிய உளவாளி: வெளிவந்த உண்மைகள்
மொஸ்கோவில் ரஷ்ய ஜெனரல் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் கதிரியக்க, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்புப் படைகளுக்குத் தலைமை தாங்கிய லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், அவரது அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே குண்டு வெடிக்க செய்து உக்ரைன் உளவு அமைப்பு ஒன்றினால் கொல்லப்பட்டார்.
ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்பின் போது தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக உக்ரேனிய வழக்கறிஞர்கள் கிரில்லோவ் மீது குற்றஞ்சாட்டிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
தாக்குதலின் பின்னணி
உக்ரைனின் உளவு சேவையான SBU இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 29 வயதான உஸ்பெகிஸ்தான் சந்தேக நபர் SBU ஆல் பணியமர்த்தப்பட்டு அதன் அறிவுறுத்தல்களின்படி செயற்பட்டுள்ளதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலுக்காக சந்தேக நபருக்கு உக்ரைனால் $100,000 ரொக்கப் பரிசும், தப்பியோடி ஐரோப்பிய நாட்டில் வாழும் வாய்ப்பும் வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
வெடிப்பு சம்பவம்
சந்தேகநபர்,வெடிக்கும் கருவியைப் பெற்று அதை ஒரு மின்சார ஸ்கூட்டரில் வைத்து, ரஷ்ய ஜெனரல் இகோர் கிரிலோவ் வாழ்ந்த குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலில் நிறுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து, சந்தேக நபர் கிரிலோவின் வசிப்பிடத்தை கண்காணிப்பதற்காக ஒரு காரை வாடகைக்கு எடுத்து அதில் கண்காணிப்பு கமரா பொருத்தியுள்ளார்.
குறித்த கமரா உக்ரைனின் கிழக்கு நகரமான டினிப்ரோவில் தாக்குதலின் ஏற்பாட்டாளர்களால் கண்காணிக்கப்பட்டு கிரில்லோவும் அவரது உதவியாளரும் வெளியேறும் போது தொலைவில் இருந்த வெடிக்க செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |